
தமிழ் புத்தாண்டு 2023: டெல்லியில் புத்தாண்டுக் கொண்டாட்டம்
செய்தி முன்னோட்டம்
தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி கொண்டாடப்படும்.
இந்த புத்தாண்டு தினம், பல விதமான புதிய தொடக்கங்களைக் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.
தீபாவளி பண்டிகை, பொங்கல் போல விமரிசையாக வீடுகளை சுத்தம் செய்து, அலங்கரித்து, அறுசுவை விருந்து சமைத்து கொண்டாடப்படும்.
வீடுகளில் மட்டுமில்லாமல், நாடு முழுவதும் பல இடங்களில் தமிழ்புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெறுகிறது.
அதில் முக்கியமானது தான், டெல்லியில் இன்று (ஏப் 14) அன்று நடைபெற இருக்கும் புத்தாண்டுக் கொண்டாட்டம் ஆகும்.
இந்த விழாவை, தமிழகத்தின் அமைச்சரான எல்.முருகன் நடத்துகிறார்.
இதில் கலை நிகழ்சிகள், விருந்து, உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN || டெல்லியில் உள்ள எல்.முருகன் இல்லத்தில் தமிழ் புத்தாண்டு விழா - பட்டு வேஷ்டி, பட்டுச்சட்டை அணிந்து பங்கேற்றார் பிரதமர் மோடி | #PMModi | #Delhi | #LMurugan | #TamilNewYear2023 | #TamilNewYear | https://t.co/CKGwVuqJ6O pic.twitter.com/Af6UaBKDAb
— Polimer News (@polimernews) April 13, 2023