பெங்களூரு காவல்துறையின் புதுவிதமான வீடியோ வைரல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் பரபரப்பான ரோடுகளில் பைக் சாகசம் செய்யும் இளைஞர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இதனால் ஏற்படும் விபத்துகளும் வெகுவாக அதிகரித்துள்ளது.
இது போன்ற சாகசங்கள் பற்றிய விழுப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பெங்களூரு காவல்துறை ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருக்கிறது.
'Dumb ways to die'(இறப்பதற்கு இருக்கும் முட்டாள்தனமான வழிகள்) என்ற பிரபலமான பாடலை கொண்டிருக்கும் இந்த வீடியோவில் ஒரு இளைஞர் பைக் சாகசம் செய்வது காட்டப்பட்டுள்ளது.
இந்த வீடியோ ட்விட்டர் முழுக்க தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவின் மூலம் சாவதற்கு இருக்கும் முட்டாள்தனமான வழிகளில் இதுவும் ஒன்று என்று பெங்களூரு காவல்துறை கூறியுள்ளது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்டதில் இருந்து, இந்த ட்வீட் 166,000 பார்வைகளுடன் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
வைரலாகி வரும் பெங்களூரு காவல்துறையின் வீடியோ
If you do survive, you know we'll be waiting for you 👋🏻 pic.twitter.com/SPh1Wt1VZb
— ಬೆಂಗಳೂರು ನಗರ ಪೊಲೀಸ್ BengaluruCityPolice (@BlrCityPolice) March 2, 2023