
கன்னியாகுமரியில் கனமழை காரணமாக வெள்ளம் - பாதுகாப்பான இடத்திற்கு மக்கள் மாற்றம்
செய்தி முன்னோட்டம்
கன்னியாகுமரியில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
அதன்படி கடந்த 19ம்.,தேதி மதியவேளையில் பெய்த இடி-மின்னலுடன் கூடிய மழையால் சன்னதி தெருவிலுள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு பகவதி அம்மன் கோயிலின் வெளிப்பக்கம் வெள்ளம் சூழ்ந்தது என்று தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தற்போது கன்னியாகுமரி சரல்விளை என்னும் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் புத்தனாறு கால்வாய் உடைந்து அப்பகுதியிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் விளைநிலங்களில் வெள்ளம் புகுந்தது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இதனை தொடர்ந்து பாதிப்படைந்த பகுதிக்கு படகில் சென்றுள்ள தீயணைப்பு படையினர் அங்கு சிக்கியுள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
கனமழை பாதிப்புகள்
#NewsUpdate | கன்னியாகுமரியில் கனமழை காரணமாக கால்வாயில் உடைப்பு - வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்#SunNews | #Kanyakumari | #TNRains pic.twitter.com/5ongwNeR6H
— Sun News (@sunnewstamil) October 23, 2023