மீண்டும் சென்னையில் அதிநவீன 'டபுள் டக்கர்' பேருந்து
செய்தி முன்னோட்டம்
இந்தியாவிலேயே மிகப்பெரிய பேருந்து போக்குவரத்தினை கொண்ட மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
அதன்படி, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் டபுள்-டக்கர் பேருந்துச்சேவை இருந்துள்ளது.
மாடிப்பேருந்து என மக்கள் அழைக்கப்பட்டு நல்ல வரவேற்பினை பெற்ற இந்த டபுள்-டக்கர் பேருந்து, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இப்பேருந்து சேவையினை துவங்க தமிழக போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதுத்தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், இன்று(ஆகஸ்ட்.,4)சென்னை அண்ணா சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் இப்பேருந்தின் சோதனை ஓட்டம் துவங்கியுள்ளது.
அப்போது இதனை இயக்குவதிலுள்ள இடர்பாடுகள் குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது என கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து தற்போது சுற்றுலாத்தலங்களை இணைக்கும் வழித்தடங்களில் இந்த டபுள்-டக்கர் பேருந்து சேவையினை துவங்க ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
டபுள் டக்கர் பேருந்து
#Watch | "போலாம் Right...!"
— Sun News (@sunnewstamil) August 4, 2023
சென்னையை அலங்கரிக்க வரும் அதிநவீன 'Double Decker' பேருந்து!#SunNews | #Chennai | #DoubleDeckerBus pic.twitter.com/bxUvDBS2fw