
ஈபிஎஸ்-ஓபிஎஸ் பிரச்சனையில் தலையிட விரும்பவில்லை - அமித்ஷா
செய்தி முன்னோட்டம்
கர்நாடகா மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலினை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் அமித்ஷா இன்று(மே.,5) ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது அவரிடம் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஒன்றிணைய விரும்புகிறீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், அதிமுகவில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையேயான பிரச்சனையில் தலையிட நான் விரும்பவில்லை.
இது அந்த கட்சியின் உள்விவகாரம். இருவரும் பேசி சுமூக முடிவினை எடுக்கவேண்டும்.
அதே சமையம் சுமூக முடிவினை அமைத்து கொள்ள வேண்டுமா வேண்டாமா? என்பதும் அவர்களது முடிவு.
அதனையும் நான் தீர்மானிக்க முடியாது என்று விளக்கமாக தனது பதிலினை அளித்தார்.
விளக்கம்
பாஜக கட்சியில் வாரிசு அரசியல் இல்லை - அமித்ஷா
இதனை தொடர்ந்து அவரிடம் கர்நாடகா தேர்தலில் எடியூரப்பாவின் மகனுக்கு சீட் வழங்கப்பட்டது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை.
வாரிசு அரசியலுக்கும், அரசியல்வாதியின் மகன் தேர்தலில் போட்டியிடுவதற்கும் வித்தியாசம் உண்டு.
பாஜக யாருடைய குடும்ப பிடியிலும் இல்லை என்று கூறினார்.
இதற்கிடையே, தமிழகத்தில் அதிமுக-பாஜக இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
இதனால் இந்த கூட்டணி தொடருமா? என்னும் கேள்வி அரசியல் வட்டாரத்தில் நிலவியது.
அந்நிலையில், கடந்த மார்ச் மாதம் டெல்லியில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய அமித்ஷா, தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று திட்டவட்டமாக கூறியது குறிப்பிடத்தக்கது.