ரூபாய் நோட்டில் கிறுக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்று கூறப்படுவது உண்மையா
இந்திய ரூபாய் நோட்டில் ஏதாவது எழுதப்பட்டிருந்தாலோ அல்லது அழுக்கு படிந்திருந்தாலோ அந்த ரூபாய் நோட்டு செல்லாது என்ற தகவல் சமீப காலமாக வைரலாக பரவி வருகிறது. இது உண்மை தானா என்ற கேள்விக்கு மத்திய அரசின் தகவல் பிரிவான பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ(PIB) பதிலத்துள்ளது. ட்விட்டரில் இது குறித்து பதிவிட்டிருக்கும் PIB , "இல்லை. கிறுக்கப்பட்டிருக்க கூடிய ரூபாய் நோட்டுகள் செல்லாதவை அல்ல. இவை தொடர்ந்து சட்டப்பூர்வமான அங்கீகாரத்தத்துடன் இருக்கும். சுத்தமான நோட்டுக் கொள்கையின் படி, ரூபாய் நோட்டுகளில் எழுதினால் அதன் ஆயுள் குறையும் என்பதால் மக்கள் அதில் எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என்று கூறியுள்ளது. மக்கள் மத்தியில் இந்த சந்தேகம் தொடர்நது நிலவி வந்ததால் அரசு இதற்கு பதிலளித்துள்ளது,