NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விஜயகாந்துக்கு 'டிரக்கியாஸ்டமி' சிகிச்சையளிக்க மருத்துவர்கள் முடிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    விஜயகாந்துக்கு 'டிரக்கியாஸ்டமி' சிகிச்சையளிக்க மருத்துவர்கள் முடிவு 
    விஜயகாந்துக்கு 'டிரக்கியாஸ்டமி' சிகிச்சையளிக்க மருத்துவர்கள் முடிவு

    விஜயகாந்துக்கு 'டிரக்கியாஸ்டமி' சிகிச்சையளிக்க மருத்துவர்கள் முடிவு 

    எழுதியவர் Nivetha P
    Nov 29, 2023
    07:54 pm

    செய்தி முன்னோட்டம்

    தேமுதிக கட்சி தலைவரும், சினிமா நடிகருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு, தனது பொது வாழ்க்கையில் இருந்து சற்று ஒதுங்கி வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார்.

    இந்நிலையில், கடந்த 18ம்.,தேதி சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள மியாட் மருத்துவமனையில், தொடர் இருமல், மார்புசளி, காய்ச்சல், உடல் சோர்வு உள்ளிட்ட பாதிப்புகள் காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சையளித்து வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை அறிக்கையும் வெளியானது.

    ஆனால் இன்று(நவ.,29) மியாட் மருத்துவமனை நிர்வாகம் இதற்கு எதிர்மறையான அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    மருத்துவமனை 

    டிரக்கியாஸ்டமி சிகிச்சையளிப்பது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை 

    அதன்படி அந்த அறிக்கையில், 'விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை. அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது' என்றும்,

    'அவருக்கு இன்னும் 14 நாட்களுக்கு மருத்துவமனையின் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது' என்றும் கூறப்பட்டிருந்தது.

    இந்த தகவலானது அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல்படி, விஜயகாந்துக்கு தற்போதுள்ள ஸ்வாசக்கோளாறுக்கு நிவாரணம் அளிக்க வேண்டுமெனில் அவருக்கு 'டிரக்கியாஸ்டமி' சிகிச்சையளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை செய்து வருகிறார்களாம்.

    டிரக்கியாஸ்டமி என்றால், கழுத்தின் வெளிப்புறத்தில் மூச்சு குழாயில் ஒரு சிறு துளையிட்டு திறப்பை உருவாக்கி ஸ்வாசத்தை சீராக்கும் நடைமுறையாகும் என்றும், அந்த துளை மூலம் ஒரு குழாய் செருகப்பட்டு அதன் மூலம் ஸ்வாசிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    மருத்துவமனை
    விஜயகாந்த்
    தேமுதிக

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சென்னை

    காசிமேடு கடற்கரையினை ரூ.8.65கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணி - முதல்வர் அடிக்கல் நாட்டினார்  தமிழ்நாடு
    இன்று முதல் சென்னை தீவுத்திடல் பகுதியில் போக்குவரத்து மாற்றம் போக்குவரத்து விதிகள்
    தமிழக காங்கிரஸ் தலைவராக விரும்பும் கார்த்தி சிதம்பரம்  காங்கிரஸ்
    திரையுலகம் சார்பில் கலைஞர்100- ரஜினிக்கு நேரில் அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் கலைஞர் கருணாநிதி

    மருத்துவமனை

    ஒரே நாளில் 6 முறை இதயத்துடிப்பு நின்றுபோன மாணவர்: காப்பாற்றிய மருத்துவர்கள் இங்கிலாந்து
    டிஸ்சார்ஜ் ஆனார் செந்தில் பாலாஜி - மீண்டும் புழல் சிறையில் அடைப்பு  செந்தில் பாலாஜி
    மருத்துவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்த தமிழக மருத்துவமனைகள் கேரளா
    மதுரை அரசு மருத்துவமனை - குடும்பநல அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம்  அரசு மருத்துவமனை

    விஜயகாந்த்

    "என் உயிரை நான் சந்தித்தபோது": கேப்டன் விஜயகாந்தை சந்தித்த இயக்குனர் S.A. சந்திரசேகர் கோலிவுட்
    தமிழகத்தில் புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் - எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் அறிக்கை மத்திய அரசு
    வெளிநாட்டில் மாற்ற உடையின்றி தவித்த ரஜினிகாந்த்! என்ன நடந்தது? ரஜினிகாந்த்
    எந்த கூட்டணியுடனும் தற்போது செயல்படவில்லை: தேமுதிக அறிவிப்பு தேமுதிக

    தேமுதிக

    பாதயாத்திரை மேற்கொள்ளும் பாஜக அண்ணாமலை - தேமுதிக'விற்கு அழைப்பு  அமித்ஷா
    விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு - விஜயபிரபாகரன் பேட்டி விஜயகாந்த்
    பிறந்தநாளை முன்னிட்டு, நாளை  தொண்டர்களை சந்திக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  விஜயகாந்த்
    காவிரி விவகாரம் - தமிழக ஆளுநரை சந்தித்தார் பிரேமலதா விஜயகாந்த்  காவிரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025