
ஈரோடு கத்திரிமலையை வெளியுலகத்துடன் இணைக்க 5GHz வைஃபை இணையம்-மாவட்ட நிர்வாகம் அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கத்திரிமலை என்னும் மலை கிராமத்தில் சாலைகள் இல்லை, மின்சாரம் வெகுசில வீடுகளிலேயே பார்க்க முடியும்.
இப்படிப்பட்ட கிராமத்தில் சிகிச்சை பெறவேண்டும் எனில், 40 கி.மீ., தொலைவில் உள்ள சுகாதார மையத்திற்கே செல்லவேண்டிய நிலை.
இந்நிலையை மாற்ற ஒன்பது மாதங்களுக்கு முன்னர் அம்மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணனுன்னி மற்றும் அவரது குழுவினர் ஓர் திட்டத்தை ஆலோசித்துள்ளனர்.
அதன்படி கத்திரிமலையை வெளியுலகத்தோடு இணைக்கும் நோக்கத்தோடு அதிவேக 5 GHz வைஃபை இணையத்தை பயன்படுத்த முற்பட்ட ஓர் லட்சியத்திட்டமான புன்னகை திட்டத்தை மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்தியது.
வைஃபை இணையசேவை அமைக்கப்பட்ட நிலையில் அங்குள்ள பள்ளியின் கணினிதிரையில் ஒருநொடியில் மருத்துவரை அணுக முடிவதால், தற்போது அங்கு வசிக்கும் மக்கள் அனைவருக்கும் மருத்துவ வசதி எளிதாக கிடைக்கிறது.
434 மாணவ பயனாளர்கள்
டெலிமெடிசின் திட்டம் மூலம் பயனடைந்த மலைவாசிகள்
இந்த டெலிமெடிசின் திட்டம் குறித்து அங்குள்ள மலைவாசி ஒருவர் கூறுகையில், நாங்கள் கூறும் அறிகுறிகளைகேட்டு மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். அந்த மருந்துகளை நாங்கள் நகரத்திற்கு செல்லும்போது வாங்கிகொள்கிறோம் என்று தெரிவித்தார்.
இத்திட்டத்தை தொடங்க முதல் தடை தொலைபேசி மற்றும் சாலைகள் இல்லாதது.
இதனையடுத்து அப்பகுதியில் ஒரு தகவல் தொடர்பு வலையமைப்பு உருவாக்கப்பட்டது.
அதன் பின்னரே, கிருஷ்ணனுன்னியும் அவரது குழுவினரும் வைஃபை குறித்து ஆலோசித்துள்ளார்கள்.
இதனையடுத்து சமூக கணிப்பொறி மையத்தின் குழு, நபார்டு வங்கியுடன் இணைந்து மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் உதவியுடன் ஒரு கோபுரத்தையும் தேவையான வன்பொருளையும் நிறுவினர்.
காடுகளிலிருந்து 40கி.மீ.,தொலைவில் உள்ள அந்தியூர் நகரத்தில் இருந்து இணையத்திற்கான தொழில்நுட்ப உதவி கிடைத்துள்ளது.
இந்த வைஃபை சுற்றுவட்டாரத்தில் உள்ள 434மாணவர்களுக்கும் பயன்படுகிறது என்பது குறிப்பிடவேண்டியவை.