போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் இருக்கும் தொடர்பு குறித்து இயக்குனர் அமீரிடம் விசாரணை
செய்தி முன்னோட்டம்
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க இயக்குனர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.
இது தொடர்பாக, இன்று டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவின் தலைமையகத்தில் இயக்குனர் அமீர் நேரில் ஆஜராகி உள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர், இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு திருட்டுத்தனமாக போதை பொருளை ஏற்றுமதி செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் NCB நடத்திய சோதனையில், மேற்கு டெல்லியில் உள்ள குடோனில் போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ 2ஆயிரம் கோடி மதிப்பிலான 50கிலோ ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்தபோது தான் ஜாபர் சாதிக் பற்றி தெரிய வந்தது.
ஜாபிர் சாதிக்
கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்
இதனையடுத்து தலைமறைவான ஜாபர் சாதிக்கை மார்ச் மாதம் ராஜஸ்தானில் வைத்து கைது செய்துனர் போதை பொருள் தடுப்பு பிரிவினர்.
இதனிடையே, ஜாபர்சாதிக் படத்தயாரிப்பில் இறங்கியிருந்ததும் தெரியவந்தது.
குறிப்பாக அவரது தயாரிப்பில் இயக்குனர் அமீர், இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை எடுத்து வருகிறார் எனக்கூறப்பட்டது.
அதோடு, ஜாபர் சாதிக் உடன் இணைந்து காபி ஷாப் ஒன்றை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து இரண்டு பேருக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க இயக்குனர் அமீருக்கு சம்மன் அனுப்பட்டது.
ரம்ஜான் ஈத் நிறைவுற்றதும் நேரில் ஆஜராவதாக கோரிக்கை கடிதத்தை இரு தினங்களுக்கு முன்னர் அமீர் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில், இன்று டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலக்த்தில் இயக்குனர் அமீர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.