வரலாற்று நிகழ்வு: கொல்கத்தாவின் மிகப்பெரும் வகுப்புவாத கலவரத்தின் பின்னணி- பகுதி 2
வரலாற்று நிகழ்வு: 1946ஆம் ஆண்டில், முகமது அலி ஜின்னா ஆகஸ்ட்-16ஐ 'நேரடி நடவடிக்கை நாள்' என்று அறிவித்தார். மேலும், நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் 'அனைத்து வணிகத்தையும் நிறுத்த வேண்டும்' என்று அவர் கேட்டு கொண்டார். மதத்தின் அடிப்படையில் நாட்டைப் பிரிக்க வேண்டும் என்ற முஸ்லீம் லீக்கின்(ஜின்னாவின் அரசியல் கட்சி) கோரிக்கையை வலியுறுத்தி, பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்த மாபெரும் ஸ்ட்ரைக்கை அவர் அறிவித்தார். இதன்மூலம், முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தானை உருவாக்க முடியும் என்று அவர் நம்பினார். வங்காள மாநிலம், முஸ்லிம்கள் அதிகமாக இருந்த ஒரு பகுதியாகும். எனவே, ஜின்னாவின் இந்த கோரிக்கை, அப்பாவி வங்காள மக்களை, இந்துக்கள் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நிலை நிறுத்தியது.
இது ஒரு மாபெரும் கலவரமாக மாறியதால், 4000-பேர் கொல்லப்பட்டனர்
மேலும், காலனித்துவ பிரிட்டனுக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் நடத்தப்பட்டபோது, தேசப்பற்று என்பது மதத்துடன் தொடர்புடைய ஒன்றாக மாறிவிட்டது. ஒரு இந்தியனாக இருப்பது இந்துவாக இருப்பதற்குச் சமம் என்ற கருத்து மேலோங்க தொடங்கியது. இந்நிலையில், ஆகஸ்ட் 16ம் வந்தது. அன்று காலையில் இருந்தே அடைக்கப்படாத கடைகள் மீது கற்கள் எரியப்பட்டன. பல கத்தி குத்து சம்பவங்களும் பதிவாகியது. இது அப்படியே கைமீறி ஒரு மாபெரும் கலவரமாக மாறியதால், 4000-பேர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்திற்கு காரணம் ஜின்னா தான் என்று பலரும் குற்றம்சாட்டினர். ஜின்னாவுக்கு கிடைத்த கெட்ட பெயரால் அதற்கு அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. இந்த கலவரத்தில் ஏற்பட்ட பீதியால் இஸ்லாமியர்கள் அனைவரும் ஜின்னாவுக்கு ஆதரவளிக்க தொடங்கினர். அதன்பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிக்கப்பட்டது.