ஆந்திராவில் தங்கத்திற்கு பதில் தக்காளியினை எடைக்கு எடை காணிக்கை கொடுத்த தம்பதி
தக்காளியின் விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில் ஆந்திரா மாநிலத்தில் 1 கிலோ தக்காளி தற்போது ரூ.120க்கு விற்பனையாகிறது. இந்நிலையில் அனகாப்பள்ளி மாவட்டத்திலுள்ள நுகாலம்மா அம்மன் கோயிலில், அதேப்பகுதியினை சேர்ந்த ஜக்காஅப்பாராவ்-மோகினி தம்பதி,ஓர் வேண்டுதலினை வைத்துள்ளனர். அந்த வேண்டுதல் நிறைவேறினால் தங்க மூக்குத்தியினை செலுத்துவதாக வேண்டியுள்ளனர். வேண்டுதல் நிறைவேறியப்பட்சத்தில் அவர்கள் மூக்குத்தியினை செலுத்த கோயில் சென்றபொழுது, கோயில் நிர்வாகம் மூக்குத்திக்கு பதிலாக தக்காளி வாங்கித்தருமாறு கோரியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் தங்கள் மகள் பவிஷ்யாவின் எடைக்கேற்ப தக்காளியினை காணிக்கையாக செலுத்தி,நேர்த்திக்கடனை செய்து முடித்துள்ளனர். அதன்படி 51கிலோ தக்காளி, வெல்லம், சர்க்கரை உள்ளிட்டவைகளை எடைக்குஎடை செலுத்தியுள்ளனர். இந்த துலாபார வேண்டுதலினை காண அப்பகுதி மக்கள் ஒன்று திரண்ட நிலையில், சிலர் அதனை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவுச்செய்துள்ளனர்.