மானசரோவர் யாத்திரை சென்ற 148 தமிழர்கள் நேபாளத்தில் பத்திரமாக இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளனர்
செய்தி முன்னோட்டம்
மானசரோவர் ஆன்மீக யாத்திரைக்காகத் தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு சென்ற 148 தமிழர்கள், கடும் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சாகா என்ற இடத்தில் சிக்கியுள்ளனர். அந்த ஆன்மீகக் குழுவில் இடம்பெற்றுள்ள பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி, தங்களது நிலை குறித்து வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். "நாங்கள் மானசரோவர் யாத்திரை செல்லும் வழியில் சாகா பகுதியில் பாதுகாப்பாக உள்ளோம். நிலச்சரிவு காரணமாகப் போக்குவரத்துப் பாதைகள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளன. நாங்கள் மீண்டும் தாய்நாடு திரும்புவதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு நேபாளம், சீனா மற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்". "அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய ஒத்துழைப்பு வழங்கி, பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாகத் தாய்நாடு திரும்ப இறைவனைப் பிரார்த்தனை செய்கிறோம்" என்றார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | "கைலாஷ் யாத்திரை சென்ற 150 பேரும் பத்திரமாக உள்ளோம்"
— Sun News (@sunnewstamil) August 27, 2026
வீடியோ வெளியிட்ட ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி#SunNews | #NepalFlood pic.twitter.com/zR9fN5oUP2
வெள்ளப்பெருக்கு
ரற்ற வானிலை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாகப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், சிக்கியுள்ள 148 தமிழர்களையும் பாதுகாப்பாக மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நேபாளத்தில் தற்போது தொடர்பு கண்டறிய முடியாத ஐந்து முக்கிய இந்திய குழுக்களை வெளியுறவு அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.
இவர்களில், திரிசூலி-1 மின் திட்டத்தில் பணிபுரியும் 73 பேர்; கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காகப் பயணம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு குழுக்கள் (37 மற்றும் 49 பேர்); மற்றும் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியான ரசுவா மாவட்டத்திற்குப் பயணம் செய்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 32 பேர் கொண்ட குழு ஆகியோர் அடங்குவர்.