மத்திய தலைமை செயலகத்தில் தீ விபத்து; விரைந்த தீயணைப்புப் படை
செய்தி முன்னோட்டம்
புதுடெல்லியில் உள்ள ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் மத்திய அரசின் முக்கிய அலுவலகங்கள் இயங்கி வரும் நார்த் பிளாக் கட்டடத்தில் திங்கள்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்திலிருந்து அடர்ந்த புகை வெளியேறியதை அடுத்து அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. டெல்லி தீயணைப்புத் துறைக்கு காலை 11:10 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக விரைந்து செல்லப்பட்டன. நார்த் பிளாக் கட்டடத்தின் மொட்டை மாடியில் உள்ள ஏசி பாய்லர் பகுதியில் வெல்டிங் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ பற்றியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு வீரர்களின் விரைவான நடவடிக்கையால் தீ மேலும் பரவாமல் உடனடியாக முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
விவரங்கள்
உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ இல்லை
இந்தத் திடீர் தீ விபத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என டெல்லி தீயணைப்பு சேவை மையம் உறுதி செய்துள்ளது.
சீரமைப்புப் பணிகள் நடைபெற்ற இடத்தில் இந்தச் சம்பவம் நேர்ந்துள்ளது.
பாராளுமன்றத்திற்கு செல்லும் வழியில் நார்த் பிளாக்கின் பின்புறத்திலிருந்து அடர்ந்த புகை வருவதைக் கவனித்த மாநிலங்களவை எம்பி மிலிந்த் தியோரா, இது குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளார்.
தற்போது நார்த் பிளாக் வளாகத்தில் நிலைமை சுமுகமாக உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Noticed thick smoke rising from behind North Block while on my way to Parliament. It appears there may be a fire. Hope everyone is safe and emergency services are responding swiftly. pic.twitter.com/mnUqpWfsWl
— Milind Deora | मिलिंद देवरा (@milinddeora) October 26, 2026