LOADING...
தீபாவளிக்கு UNESCO அங்கீகாரம்: அருவமான கலாசாரப் பட்டியலில் இணைந்தது
இந்தியாவிற்கு கிடைத்த இந்த குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தை உலக நாடுகள் வரவேற்றுள்ளன

தீபாவளிக்கு UNESCO அங்கீகாரம்: அருவமான கலாசாரப் பட்டியலில் இணைந்தது

எழுதியவர் Venkatalakshmi V
Dec 10, 2025
01:56 pm

செய்தி முன்னோட்டம்

தீப ஒளி திருவிழாவான தீபாவளி, யுனெஸ்கோவின் 'மனிதகுலத்தின் அருவமான கலாசார பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவ பட்டியலில்' (Representative List of the Intangible Cultural Heritage of Humanity) புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு கிடைத்த இந்த குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தை உலக நாடுகள் வரவேற்றுள்ளன. யுனெஸ்கோ தனது X சமூக ஊடகப் பக்கத்தில், "பாரம்பரியப் பட்டியலில் புதிய இணைப்பு: தீபாவளி, இந்தியா. வாழ்த்துகள்!" என்று பதிவிட்டு இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த முடிவு, டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறும் கலாசார பாரம்பரியப் பாதுகாப்பிற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் அமர்வின்போது (Intergovernmental Committee for the Safeguarding of the Intangible Cultural Heritage - ICH) எடுக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பெருமிதம்

பிரதமர் மோடி உட்பட அரசியல் தலைவர்கள் பெருமிதம்

இந்த அங்கீகாரம் குறித்துப் பேசிய இந்திய மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், தீபாவளி இந்தியர்களுக்கு மிகவும் உணர்வுபூர்வமான திருவிழா என்றும், இது தலைமுறைகளாக வாழ்ந்து வருவதாகவும் கூறினார். "இந்த யுனெஸ்கோ அங்கீகாரம் ஒரு பொறுப்பையும் வழங்குகிறது; தீபாவளியை வாழும் பாரம்பரியமாக நாம் உறுதி செய்ய வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியும் UNESCOவின் பதிவை X-இல் பகிர்ந்து,"இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை, தீபாவளி நமது கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளுடன் மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது". "இது நமது நாகரிகத்தின் ஆன்மா. இது ஒளியையும் நீதியையும் வெளிப்படுத்துகிறது. யுனெஸ்கோவின் அருவ பாரம்பரிய பட்டியலில் தீபாவளியைச் சேர்ப்பது, திருவிழாவின் உலகளாவிய பிரபலத்திற்கு மேலும் பங்களிக்கும்" என பதிவிட்டுள்ளார்.

Advertisement