
செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த டி.ராஜா: சென்னையில் பரபரப்பு
செய்தி முன்னோட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான டி.ராஜா, சென்னை செய்தியாளர் சந்திப்பில் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளை கண்டித்தும், அதற்கு நியாயம் வழங்க கோரியும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன.
இந்நிலையில், மணிப்பூர் வன்முறையை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஒரு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான டி.ராஜா கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்களிடம் பேசி கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த கட்சிக்காரர்கள் அவரை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்து சென்றனர். அவர் தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
ட்விட்டர் அஞ்சல்
திடீரென மயங்கி விழுந்த டி.ராஜா: வைரலாகும் வீடியோ
சென்னையில் இன்று காலை நடைபெற்ற போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா திடீரென மயங்கி விழுந்தார்! உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். #draja #CPI #asianetnewstamil pic.twitter.com/EHScDSTdLd
— Asianetnews Tamil (@AsianetNewsTM) July 25, 2023