
கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விழுந்து விபத்து - 4 பேர் பலி
செய்தி முன்னோட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டத்தில் உள்ள கீழவீதி பகுதியில் நேற்று இரவு(ஜன., 22) திரௌபதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.
இந்த திருவிழாவில் சுற்றுவட்டார ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.
இந்த திருவிழாவில் பக்தர்கள் கிரேனில் தொங்கியபடி சாமிக்கு மாலை அணிவிக்க வந்தனர்.
அப்பொழுது எதிர்பாரா விதமாக கிரேன் கவிழ்ந்து விழுந்தது.
இதில் கிரேனில் தொங்கியபடி வந்த கீழவீதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர் ஜோதி பாபு கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரை தொடர்ந்து, கீழே நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கூலி தொழிலாளி முத்து(39) மற்றும் கீழ்ஆவதம் பூபாலன்(40) ஆகியோரும் உயிரிழந்தார்கள்.
மேலும் இந்த விபத்தில் ஓர் பெண் குழந்தை உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்
பாதுகாப்பு நடவடிக்கைகள்
தகவலறிந்த வேலூர் சரக டிஐஜி முத்துசாமி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் புன்னை அரசு ஆரம்பசுகாதார நிலையம் மற்றும் அரக்கோணம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று(ஜன., 23) கீழ்வீதி கிராம திருவிழாவில் கிரேன் விழுந்த விபத்தில் பெரப்பெரி காலனியை சேர்ந்த சின்னசாமி(85) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து குறித்து போலீசார் கிரேன் ஆபரேட்டரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்து குறித்து தகவலறிந்த வேலூர் சரக டிஐஜி முத்துசாமி சம்பவஇடத்திற்கு நேரில்சென்று ஆய்வுசெய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துபேசிய அவர், திவிழாவிற்கு அனுமதி வழங்கப்பட்டது.
சாலை சரியில்லாத காரணத்தினால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், இனி இவ்வாறு நடைபெறாமல் இருக்க மருத்துவர், ஆம்புலன்ஸ் போன்ற பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விழுந்து விபத்து - வைரலாகும் வீடியோ
#அரக்கோணம் அடுத்த கீழ் விதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் திருவிழா #கிரேன் மூலமாக மாலை செலுத்து முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக க்ரீன் விழுந்து 8 பேர் படுகாயம்.. 2 பேர் உயிரிழப்பு #Arakonnam_crane_accident pic.twitter.com/agXhAgIydu
— RAMJI (@newsreporterra1) January 22, 2023