Page Loader
சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் ரூ.730 கோடி வாடகை செலுத்த நீதிமன்றம் உத்தரவு
சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் ரூ.730 கோடி வாடகை செலுத்த நீதிமன்றம் உத்தரவு

சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் ரூ.730 கோடி வாடகை செலுத்த நீதிமன்றம் உத்தரவு

எழுதியவர் Nivetha P
Mar 30, 2023
07:42 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் ஒருமாத கால அவகாசத்தில் 1970 முதல் 2004வரையிலான ரூ.730.87 கோடி வாடகை பாக்கியினை தமிழக அரசுக்கு செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவினை அளித்துள்ளது. இதனை தொடர்ந்து ஒருசில பணக்காரர்களுக்காக ஒதுக்கிய 160 ஏக்கர் நிலத்தில் தற்போது நடைபெறும் செயல்களில் எவ்வித பொதுநலனும் இல்லை. எனவே நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த நிலத்தினை மீட்டு மக்களின் நலனுக்காக பயன்படுத்தலாம் என்றும் நீதிபதி அரசுக்கு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் 2004ம்ஆண்டிற்கு பிறகு தற்போது வரையிலான உயர்த்தப்பட்ட வாடகைப்பாக்கி 12,381 கோடியே 35 லட்சத்து 24 ஆயிரத்து 269 ரூபாயினை 2 மாதங்களில் செலுத்த கூறி ஒரு மாதத்தில் புதிய நோட்டீஸ் தமிழகஅரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் ரூ.730 கோடி வாடகை செலுத்த உத்தரவு