Page Loader
தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு
தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு

தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு

எழுதியவர் Nivetha P
Feb 22, 2023
06:47 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கான உதவி தொகை ரூ.20,000ஆக தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையினை தமிழக அரசு தற்போது உயர்த்தி அதற்கான அரசாணையினை வெளியிட்டுள்ளது. அதில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனுமதிக்கப்பட்ட திட்ட செலவின தொகை 20,000ல் இருந்து ரூ.50,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணங்களுக்கு திட்ட செலவின தொகை ரூ.20,000லிருந்து ரூ.50,000ஆக உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் இணை ஆணையர் மண்டபத்தில் 25 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்யப்பட்டு வருகிறது.

அரசாணை பிறப்பிக்க கோரிக்கை

20 மண்டலங்களில் 500 ஜோடிகளுக்கு இலவச திருமணத்திற்கான செலவின தொகை ரூ.1,00,00,000

அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 20 மண்டலங்களில் 500 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்ய மொத்த செலவின தொகை ரூ.1,00,00,000 திருக்கோயில் நிதி மூலம் மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 20 இணை ஆணையர் மண்டலங்களில் 217 இணைகளுக்கு திருமணம் நடத்தப்பட்டு சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது என்றும், இன்னும் 283 ஜோடிகளுக்கு திருக்கோயில் மூலம் திருமணம் செய்துவைக்க படவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, இதற்கான திட்ட செலவை திருக்கோயில் நிதி மூலம் செலவினம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கவேண்டும் என்றும் ஆணையர் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.