
தமிழகத்தின் சில மாவட்டங்களில் குறையும் கொரோனா பாதிப்பு
செய்தி முன்னோட்டம்
உலகம் முழுவதும் அண்மை காலமாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது என்று செய்திகள் வெளியாகி வருகிறது.
அதன்படி இந்தியாவில் கொரோனா பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 44,945,389ஆக அதிகரித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது என்று கூறப்படுகிறது.
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 544ஆக உள்ளது.
இதுவே கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இந்த எண்ணிக்கையானது ஒன்றரை மடங்கு அதிகமாக இருந்தாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து கோவையில் 346, செங்கல்பட்டில் 179, கன்னியாகுமரியில் 173 என பாதிப்பு எண்ணிக்கை குறைந்து உள்ளது என்று அறிக்கை தெரிவிக்கிறது.
கொரோனா
கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு
மேற்கூறப்பட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது குறைந்து வந்தாலும், தொடர்ந்து தொற்று பரிசோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் விரிவுபடுத்தி வருவதாக பொது சுகாதார துறை தெரிவிக்கிறது.
மேலும் நேற்று(ஏப்ரல்.,30) மாநிலம் முழுவதும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 297 என பதிவாகியுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 50 பேருக்கும், கோவையில் 36 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மறுபுறம், வேலூரை சேர்ந்த 84வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார் என்னும் செய்தியும் வெளியாகியுள்ளது.
அவருக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட இணை நோய்கள் இருந்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.