பாலியல் குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவர் அமித் மாளவியாவை பதவி நீக்க வேண்டும் என்று கோரியது காங்கிரஸ்
பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவரும், மேற்கு வங்க மாநிலப் பிரிவு இணைப் பொறுப்பாளருமான அமித் மாளவியா, பாலியல் சலுகைகள் கேட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மாளவியா மறுத்துள்ளார். மாளவியா பாலியல் சலுகைகள் கோரியதாகக் குற்றம் சாட்டி அவரை பற்றி இழிவாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் சந்தனு சின்ஹாவுக்கு எதிராக பாஜக தலைவர் மாளவியா சட்ட நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், மாளவியாவை பதவியில் இருந்து 'உடனடியாக நீக்க' வேண்டும் என்று காங்கிரஸ் கோரியயுள்ளது. மேலும், இது குறித்து 'சுயாதீன விசாரணை' நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டு கொண்டுள்ளது.
குற்றம் செய்பவர்களுக்கு பிரதமர் மோடி அரசியல் ஆதரவளிப்பதாக குற்றச்சாட்டு
மேலும், 'குற்றம் செய்பவர்களுக்கு அரசியல் ஆதரவளிப்பதாக' பிரதமர் மோடி மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமின்றி, பாஜக அலுவலகங்களிலும் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வது உள்ளிட்ட 'கேவலமான செயல்களில்' மாளவியா ஈடுபட்டதாக ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர் என்று காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களால் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது "ராகுல் சின்ஹாவுடன் தொடர்புடைய சாந்தனு சின்ஹா என்ற ஜென்டில்மேன், பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா மீது குற்றம் சாட்டியுள்ளார். 5 நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமின்றி, மேற்கு வங்காளத்தில் உள்ள பாஜக அலுவலகங்களிலும் அவர் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்" என்று ஷ்ரினேட் தெரிவித்துள்ளார்.