LOADING...
முறிந்தது திமுக கூட்டணி! தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு
தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு

முறிந்தது திமுக கூட்டணி! தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
May 06, 2026
12:34 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசியல் வரலாற்றில் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 10 இடங்கள் தேவைப்படும் நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தவெக-விற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதன் மூலம் 10 ஆண்டுகால திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்தது தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தவெகவிற்கு ஆதரவு அளிக்கும் கடிதத்தில் கையெழுத்திட்டனர் காங்கிரஸ் MLA-க்கள்

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

நிபந்தனை

காங்கிரஸின் நிபந்தனைகளும் அதிகாரப் பகிர்வும்

விஜய் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவளிப்பதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (TNCC) மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி (CLP) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இதில் முக்கிய நிபந்தனையாக, தவெக பாஜக அல்லது என்.டி.ஏ கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியிடமிருந்தும் ஆதரவு பெறக்கூடாது எனக்கூறியுள்ளது. காங்கிரஸின் இந்த முடிவைத் தொடர்ந்து, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் (CPI), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM) மற்றும் PMK ஆகிய கட்சிகளையும் தவெக ஆதரவளிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த கூட்டணி, தற்போதைய சட்டசபை மட்டுமின்றி, உள்ளாட்சி, லோக்சபா மற்றும் ராஜ்யசபா தேர்தலுக்கும் நீளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பதவியேற்பு

பதவியேற்பு விழா ஏற்பாடுகள்

ஆட்சி அமைப்பதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளத் தவெக-வின் முக்கிய நிர்வாகியான கே.ஏ. செங்கோட்டையன், சட்டப்பேரவைச் செயலாளரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். நாளை (மே 7) தமிழகத்தின் புதிய முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 59 இடங்களை வென்ற திமுக மற்றும் 47 இடங்களை வென்ற அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளின் 60 ஆண்டுகால ஆதிக்கத்தை முறியடித்து, விஜய் அரியணையில் அமரப்போவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில், 'மதச்சார்பற்ற' சக்திகளை ஒன்றிணைப்பதன் மூலம் பாஜகவைத் தள்ளி வைப்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது

Advertisement