NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக அறிக்கை
    இந்தியா

    காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக அறிக்கை

    காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக அறிக்கை
    எழுதியவர் Nivetha P
    Mar 30, 2023, 01:39 pm 1 நிமிட வாசிப்பு
    காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக அறிக்கை
    காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக அறிக்கை

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த மாதம் 27ம்தேதி நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு 66,233வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றியினை பெற்றார். இந்நிலையில் அண்மையில் நெஞ்சுவலி காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக மருத்துவமனை தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பில் இருந்து அவர் குணமடைந்துவிட்டார் என்று பின்னர் மருத்துவமனை தெரிவித்தது. மேலும் தான் நலமுடன் இருப்பதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனே வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார். அவருக்கு இதயத்தில் ரத்தத்தை பம்ப் செய்வதில் பிரச்சனை இருப்பதால் congestive heart failureக்கு தொடர்ந்து தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அவரது உடல்நலம் தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக அறிக்கை

    #JUSTIN | காங்கிரஸ் எம்.எல்.ஏ. EVKS இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை#SunNews | #EVKSElangovan pic.twitter.com/pQchWLHhpr

    — Sun News (@sunnewstamil) March 30, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய

    தொடர்புடைய செய்திகள்

    சமீபத்திய

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023