'சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் சந்தித்தது என்பது அப்பட்டமான பொய்': பாஜக எம்பிக்கு காங்கிரஸ் பதிலடி
செய்தி முன்னோட்டம்
சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் "தேசத்துரோக" குற்றத்திற்காக விசாரிக்கப்பட வேண்டும் என்று பாஜக எம்பி ராஜ்யவர்தன்-சிங்-ரத்தோர் சில நாட்களுக்கு முன் கூறியிருந்த நிலையில், அவர் "அப்பட்டமான பொய்கள்" பேசுவதாக காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை, பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது மக்களவையில் பேசிய ரத்தோர், "நான் 2008-பெய்ஜிங் ஒலிம்பிக்கிஸுக்கு சென்றிருந்தேன். சோனியா-காந்தியும், ராகுல்-காந்தியும் அவர்கள் எங்களை சந்திக்க வராமல், சீன கம்யூனிஸ்ட் கட்சியைச் சந்தித்தனர். அவர்கள் தேசத்துரோக குற்றத்திற்காக விசாரிக்கப்பட வேண்டும்" என்று ரத்தோர் கூறியிருந்தார்.
"அவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒரு ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட அப்போது சீனா சென்றனர். அந்த ரகசிய ஒப்பந்தம் என்ன என்பதை தேசம் அறிய விரும்புகிறது." என்றும் ரத்தோர் கூறி இருந்தார்.
லவ்லவ்ஜ்
'பொய் சொல்வதில் வல்லுனர்களாக இருக்கும் கட்சி': காங்கிரஸ்
இதற்கு ட்விட்டரில் பதிலளித்திருக்கும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் , "நீங்கள் ஒரு காலத்தில் இந்திய இராணுவத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன் ராஜ்யவர்தன் ரத்தோர்... 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில், சோனியா காந்தி விளையாட்டு கிராமத்திற்குச் சென்றது மட்டுமல்லாமல், இந்தியத் தொகுதியில் உள்ள இந்திய விளையாட்டு வீரர்களையும் சந்தித்தார். இதை குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கே உறுதிப்படுத்தினார். மேலும், அபினவ் பிந்த்ரா இதை தனது 'எ ஷாட் அட் ஹிஸ்டரி' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இது உங்கள் கட்சியின் செல்வாக்கை பிரதிபலிக்கிறது. பிரதமரும் உள்துறை அமைச்சரும் கூட பொய் சொல்வதில் வல்லுனர்களாக இருக்கும் போது அந்த கட்சியை சேர்ந்த நீங்களும் அப்படி தானே இருப்பீர்கள்" என்று கூறியுள்ளார்.