2024 மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிட காங்கிரஸ் முடிவு
செய்தி முன்னோட்டம்
வரவிருக்கும் 2024 மக்களவை தேர்தலில் டெல்லியில் உள்ள அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே மற்றும் ராகுல் காந்தி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்றும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் இந்த அதிரடி அறிவிப்பால் டெல்லியினை ஆளும் ஆம் ஆத்மி கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கிறது.
மத்திய அரசினை ஆளும் பாஜக-வை எதிர்த்து அவர்கள் இம்முறை கடுமையான தோல்வியினை மக்களவை தேர்தலில் அடையவேண்டும் என்று அனைத்து எதிர்கட்சியினரும் ஒன்றாக இணைந்துள்ளனர்.
இந்த கூட்டணிக்கு 'INDIA' என அண்மையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தேர்தல்
7 தொகுதிகளிலும் போட்டியிட கட்சி மேலிடம் முடிவு
மேலும், அந்தந்த மாநிலங்களில் உள்ள வலிமையான கட்சிகளின் கீழ் தேர்தலினை எதிர்கொள்ள வேண்டும் என்று இந்த கூட்டணியின் முக்கிய திட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரான ஆல்கா லம்பா பேசுகையில், வரும் மக்களவை தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட உள்ளது என கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.
தேர்தல் வர 7 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான பணிகளை மேற்கொள்ள கட்சியினர் தயாராக அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதனிடையே 'INDIA' கட்சி கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தங்களுடன் எவ்வித ஆலோசனையினையும் இது குறித்து மேற்கொள்ளலாம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.