தவெக ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு; மார்க்சிஸ்ட்களும் விரைவில் அறிவிக்கலாம் என தகவல்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து நீடிக்கும் இழுபறிகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் சூழல் எட்டியுள்ளது. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற எண்ணை எட்ட முடியாத நிலையில், 5 எம்எல்ஏக்களை பெற்றுள்ள காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தவெகவுக்கு கைகொடுத்தது. ஆனால், இது மெஜாரிட்டிக்கு போதுமான எண்ணிக்கையில் இல்லாத நிலையில், இன்று (மே 8) நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் தவெகவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்து கடிதம் கொடுத்துள்ளது. இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டமும் நடைபெற்று வரும் நிலையில், அவர்களும் தவெகவுக்கு ஆதரவளிக்கும் எண்ணத்துடனே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN || த.வெ.க அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு | #Chennai | #TVKVijay | #CPI | #Veerapandian | #Tamilnadu | #PolimerNews pic.twitter.com/ffc31AAUeO
— Polimer News (@polimernews) May 8, 2026