
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு
செய்தி முன்னோட்டம்
அவ்வப்போது மாற்றம் அடையும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டே நிர்ணயிக்க படுகின்றன.
அதன்படி பெட்ரோல், டீசல் விலைகளை தினசரியும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை மாதத்திற்கு இருமுறையும் அரசு நீறணியிக்கிறது.
இந்நிலையில் சென்னையில் வணிகப்பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை இன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை, 1968.50க்கு ரூபாய்க்கு விற்கப்பட்ட 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டரின் விலை 39 ரூபாய் குறைக்கப்பட்டு, 1,929.50ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. எனினும், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
ட்விட்டர் அஞ்சல்
சிலிண்டர் விலை குறைப்பு
#BREAKING | சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை ₹39 குறைந்து, ₹1,929.50-க்கு விற்பனை!#SunNews | #ComercialGasCylinder | #LPGCylinder pic.twitter.com/txe1pYQsJk
— Sun News (@sunnewstamil) December 22, 2023