யோகா போட்டியில் 23 தேசிய மற்றும் சர்வதேச பதக்கங்கள் வென்ற கோவை சிறுவன்!
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன்-கிருத்திகா தம்பதியின் மகன் ஸ்ரீசாய் குரு மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், இவர் கடந்த பத்து மாதங்களாக வைஷ்ணவி என்ற யோகா பயிற்சியாளரிடம் யோகா பயின்று வருகிறார். ஆரம்ப கட்ட பயிற்சியிலேயே தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்ட ஸ்ரீசாய், இதுவரை சுமார் 23 போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார். மதுரை தமிழ்ச்சங்கம் மற்றும் கோவை மாவட்ட நடிகர் சங்கத்தினர் இவரை பாராட்டி விருதுகளும் வழங்கி உள்ளனர். விருட்ச விருட்சிகம், கண்ட பெருண்டம் போன்ற மிக கடினமான ஆசனங்களை மிக விரைவில் கற்று கொண்ட இவர், பத்து மாதங்களில் சர்வதேச அளவிலான போட்டிகளில் 23 பதக்கங்களையும் கோப்பைகளையும் வென்று குவித்துள்ளார்.