Loading...
'திங்கள் கிழமை பதில் சொல்றேன், யாரும் ஓடிடக் கூடாது': உதயநிதி விமர்சனத்திற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த முதல்வர் விஜய்
விமர்சனங்களுக்கு முதலமைச்சர் விஜய் சிரித்தபடியே பதிலளித்தது பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது

'திங்கள் கிழமை பதில் சொல்றேன், யாரும் ஓடிடக் கூடாது': உதயநிதி விமர்சனத்திற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த முதல்வர் விஜய்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 03, 2026
02:23 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கடுமையான விமர்சனங்களுக்கு முதலமைச்சர் விஜய் சிரித்தபடியே பதிலளித்தது பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "தவெக அரசு அமைந்த 116 நாட்களில் புதிய திட்டங்களை கொண்டு வராமல் திமுக அரசின் திட்டங்களை ரத்து செய்வதிலேயே கவனம் செலுத்துகிறது. திமுக ஆட்சியில் டாப் கியரில் சென்ற தமிழ்நாடு, தற்போது ரிவர்ஸ் கியரில் செல்கிறது" எனக் கடுமையாகச் சாடினார். மேலும் கோவையில் ஒரே மாதத்தில் 9 கொலைகள் மற்றும் 10 ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாக கூறி சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பினார்.

அவகாசம்

"முதல்வர் தயாராகி வரட்டும்"

தனது உரையின் முடிவில், "முதல்வர் பதிலுரை அளிக்க 3 நாட்கள் அவகாசம் உள்ளது, அவர் நன்றாகத் தயாராகிவிட்டு வரட்டும்" என உதயநிதி கூறியதால், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

பின்னர் சபாநாயகர் அவர்களை அமைதிப்படுத்தினார்.

உதயநிதியின் விமர்சனங்களுக்கு உடனடியாக பதிலளிக்கும் வகையில் எழுந்த முதலமைச்சர் விஜய், "அனைத்து எம்.எல்.ஏ-க்களும் கேட்கும் கேள்விகளுக்கு வரும் திங்கட்கிழமை நான் விரிவாகப் பதிலளிப்பேன். நான் அவையில் இல்லாத நேரத்திலும் அனைத்துக் கேள்விகளும் எனக்கு வந்து சேரும். ஆனால், நான் பதிலளிக்கும் போது யாரும் எழுந்து ஓடிவிடக் கூடாது என்று பிராமிஸ் செய்ய வேண்டும்" எனக் கூறி புன்னகையுடன் அவையிலிருந்து வெளியேறினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT