Loading...
ரூ.1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு
விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்

ரூ.1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 03, 2026
11:12 am

செய்தி முன்னோட்டம்

தமிழகச் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு பிரம்மாண்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் ஒரு முக்கிய அம்சமாக, சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ. 1,200 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பிரம்மாண்டமான புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ஸ்போர்ட்ஸ் நகரம்

சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்

தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே மோட்டார் பந்தயங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, விளையாட்டு சுற்றுலாவையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தப் புதிய "மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்" உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3, மற்றும் ஃபார்முலா 4 உள்ளிட்ட பன்னாட்டுப் பந்தயங்களை நடத்தும் வகையில் சர்வதேசத் தரத்திலான பந்தயத் தடம் மற்றும் பயிற்சி மையங்கள் இங்கு அமைக்கப்படும்.

தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர்களை உருவாக்குவதோடு, தமிழ்நாட்டை உலகளாவிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் மையமாக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

ADVERTISEMENT

ஒலிம்பிக் சிட்டி

ஒருங்கிணைந்த 'ஒலிம்பிக் சிட்டி'

ஒலிம்பிக் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் தமிழக வீரர்கள் அதிக பதக்கங்களை வெல்லும் வகையில், உலகத்தரம் வாய்ந்த "ஒலிம்பிக் சிட்டி" அமைக்கப்படும்.

இதில் அதிநவீன விளையாட்டு உபகரணங்கள், உயர்தர செயல்திறன் பயிற்சி மையம், விளையாட்டு மருத்துவ மையங்கள் மற்றும் தங்குமிட வசதிகள் ஆகியவை இடம்பெறும்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவித்த பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, "விளையாட்டு வீரர்களின் 100 ஆண்டுகாலக் கனவை நனவாக்கும் வகையில் இந்த 'ஒலிம்பிக் சிட்டி' அமையும்; இது வருங்காலத்தில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான உள்கட்டமைப்பை உருவாக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT