Loading...
குடும்பத் தலைவிகளுக்கு நற்செய்தி! ஆண்டிற்கு 3 விலையில்லா சிலிண்டர் என பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
3 விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் விஜய்

குடும்பத் தலைவிகளுக்கு நற்செய்தி! ஆண்டிற்கு 3 விலையில்லா சிலிண்டர் என பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 24, 2026
10:23 am

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், பொதுமக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். வளைகுடாப் பகுதியில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் சர்வதேசச் சூழலால் எரிவாயு உருளைகளின் விலை உயர்ந்து குடும்ப நிர்வாகத்திற்கு கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டு வருகின்றன. இச்சூழலில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இத்திட்டம் பொங்கல் பண்டிகை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

செயல்படுத்தும் முறை

திட்டத்தின் பின்னணி மற்றும் செயல்படுத்தும் முறை

வளைகுடாப் பகுதியில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் சர்வதேசச் சூழலால் எரிவாயு உருளைகளின் விலை உயர்ந்து குடும்ப நிர்வாகத்திற்கு கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இச்சூழலில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இத்திட்டம் பொங்கல் பண்டிகை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயனாளிக்கான சிலிண்டர் தொகையானது எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து விவரங்கள் பெறப்பட்டு நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் (DBT) வரவு வைக்கப்படும்.

தகுதி வரம்புகள்

பயனடைவோர் மற்றும் தகுதி வரம்புகள்

இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள சுமார் 1 கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் நேரடியாக பயனடைவர்.

ஆண்டிற்கு ₹2.5 லட்சத்திற்கு மிகாமல் குடும்ப வருமானம் கொண்டவர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன் பெறத் தகுதியானவர்கள் ஆவர்.

மாநிலத்தில் நிதி நெருக்கடியான சூழல் நிலவியபோதிலும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி குடும்பத் தலைவிகளுக்கு உறுதுணையாக இருக்கும் பொருட்டு இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக முதலமைச்சர் விஜய் தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT