
மதுரையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை
செய்தி முன்னோட்டம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று விமானம் மூலம் மதுரை சென்றார் முதல்வர் ஸ்டாலின். இதனை அடுத்து இன்று காலை அமைச்சர் பெருமக்களுடன் முழு உருவ தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின், கோரிப்பாளையம் சந்திப்பு மற்றும் மதுரை தொண்டி சாலையில் கட்டப்படவிருக்கும் மேம்பால பணிகளை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர், மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கும், முதல்வர் ஸ்டாலின் மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.
2nd card
பசும்பொன் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்
மதுரையில் அரசு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, முதல்வர் ஸ்டாலின் சாலை மார்க்கமாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு செல்கிறார்.
அங்கு அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.
முதல்வர் மரியாதை செலுத்திய பின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி, அமமுக பொதுச்செயலாளர் தினகரன், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்த உள்ளனர்.
முதல்வர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு, பசும்பொன் கிராமத்தில் சுமார் 12,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க, தென் மண்டல ஐஜி நரேந்திரன் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
தேவர் சிலைக்கு முதல்வர் மரியாதை
மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.#CMMKSTALIN | #TNDIPR@CMOTamilnadu@KKSSRR_DMK @TThenarasu @OfficeOfKRP @ptrmadurai @Anbil_Mahesh pic.twitter.com/hLtJyjALng
— TN DIPR (@TNDIPRNEWS) October 30, 2023