
'ஜெயிலர்' திரைப்படம் - இயக்குனர் நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர்
செய்தி முன்னோட்டம்
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து நேற்று(ஆகஸ்ட்.,10)வெளியான திரைப்படம் தான் 'ஜெயிலர்'.
இப்படம் தமிழகத்தில் 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், உலகம் முழுவதும் 4000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்நாள் வசூலில் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.29.46 கோடி வசூல் செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்நிலையில், இப்படத்தினை பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இயக்குனர் நெல்சனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
இதற்கு நெல்சன், 'ஜெயிலர் படத்தினை பார்த்துவிட்டு உத்வேகம் அளிக்கும் வகையில் பாராட்டுகளை தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மிக்க நன்றி' என்றும்,
அவரது வார்த்தைகள் படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
தமிழக முதல்வர் வாழ்த்து
#BREAKING | ‘ஜெயிலர்’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் நெல்சன்#SunNews | #JailerBlockbuster | #CMMKStalin | @mkstalin | @rajinikanth | @Nelsondilpkumar | pic.twitter.com/TqWl42acku
— Sun News (@sunnewstamil) August 11, 2023