உச்ச நீதிமன்றத்தில் இனி 'அளவற்ற' வாதங்களுக்கு இடமில்லை! வழக்கறிஞர்களுக்கு நேரக்கட்டுப்பாட்டை விதித்தார் தலைமை நீதிபதி
செய்தி முன்னோட்டம்
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், நீதிமன்ற நேரத்தை சரியாகப் பயன்படுத்தவும் இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் அதிரடியான புதிய நடைமுறையைக் கொண்டுவந்துள்ளார். இனிவரும் காலங்களில் வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களை முன்வைக்கக் குறிப்பிட்ட நேரத்தை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்காக ஒரு புதிய வழிகாட்டுதல் நெறிமுறையை (SOP) தலைமை நீதிபதி பிறப்பித்துள்ளார்.
வழிகாட்டுதல்
வழக்கறிஞர்கள் முன்கூட்டியே எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்க வேண்டும்
ஜனவரி 2026 முதல், "முடிவில்லாத வாதங்களை நான் அனுமதிக்க மாட்டேன்" என்று தலைமை நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வழக்கறிஞர்கள் தாங்கள் எவ்வளவு நேரம் வாதாடப் போகிறோம் என்பதை முன்கூட்டியே எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்திடம் தெரிவிக்க வேண்டும். வாதங்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் முன்வைக்க ஏதுவாக, 5 பக்கங்களுக்கு மிகாமல் ஒரு சுருக்கமான குறிப்பை (Brief Note) விசாரணை காலத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பே வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஏழை எளிய மக்கள் பிணை (Bail) கோரியும், நீதி வேண்டியும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் நிலையில், பெரிய வழக்குகளில் வாதங்கள் பல மணிநேரம் நீடிப்பதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வழக்குகளுக்கும் சமமான நேரம் ஒதுக்கப்படும்.
வழிகாட்டுதல்
வழிகாட்டுதல் உத்தரவு
"மூத்த வழக்கறிஞர்கள், வாதாடுபவர்கள் மற்றும்/அல்லது வழக்கறிஞர் பதிவு செய்பவர்கள், அனைத்து அறிவிப்புக்குப் பிந்தைய மற்றும் வழக்கமான விசாரணை விஷயங்களிலும் வாய்மொழி வாதங்களை மேற்கொள்வதற்கான காலக்கெடுவை, வழக்கின் விசாரணை தொடங்குவதற்கு குறைந்தது ஒரு நாள் முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும். வழக்கறிஞரின் பதிவுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தோற்றச் சீட்டுகளை சமர்ப்பிப்பதற்கான ஆன்லைன் போர்டல் மூலம் மாண்புமிகு நீதிமன்றத்திற்கு இது சமர்ப்பிக்கப்பட வேண்டும்". "வாதாடுபவர்கள் மற்றும்/அல்லது மூத்த வழக்கறிஞர்கள், தங்கள் வழக்கறிஞர் பதிவு அல்லது மாண்புமிகு நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட நோடல் ஆலோசகர்கள் மூலம், ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் ஒரு சுருக்கமான குறிப்பு / எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்பை தாக்கல் செய்ய வேண்டும்" என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.