LOADING...
ஓபிசியைப் போல் தாழ்த்தப்போட்டோர் இட ஒதுக்கீட்டிலும் கிரீமி லேயர் அவசியம்; தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தல்
தாழ்த்தப்போட்டோர் இட ஒதுக்கீட்டிலும் கிரீமி லேயர் அவசியம்; தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தல்

ஓபிசியைப் போல் தாழ்த்தப்போட்டோர் இட ஒதுக்கீட்டிலும் கிரீமி லேயர் அவசியம்; தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தல்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 17, 2025
12:24 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர்.கவாய், தாழ்த்தப்பட்டோருக்கான (SC) இடஒதுக்கீட்டிலும் கிரீமி லேயர் முறையைக் கொண்டு வருவதை இப்போதும் ஆதரிப்பதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். "இந்தியா மற்றும் 75 ஆண்டுகளில் வாழும் இந்திய அரசியலமைப்பு" என்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பி.ஆர்.கவாய், ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் குழந்தையையும், ஒரு ஏழைக் கூலி விவசாயத் தொழிலாளியின் குழந்தையையும் இட ஒதுக்கீடு விஷயத்தில் சமமாகக் கருத முடியாது என்று கருத்து தெரிவித்தார். "இந்திரா சஹானி வழக்கில் தீர்ப்பில் உள்ள கிரீமி லேயர் கொள்கை ஓபிசிக்களுக்கு இருப்பது போலவே, தாழ்த்தப்பட்டோருக்கும் பொருந்த வேண்டும் என்று நான் ஒரு கருத்தை எடுத்தேன். என்னுடைய இந்தக் கருத்து பரவலாக விமர்சிக்கப்பட்டாலும், நான் இன்றும் அதை உறுதியாக கொண்டுள்ளேன்." என்று அவர் குறிப்பிட்டார்.

தீர்ப்புகள்

நீதிபதிகள் தீர்ப்புகளை நியாயப்படுத்த வேண்டியதில்லை

ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளை நியாயப்படுத்த வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் நிலையானது அல்ல என்றும், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் எப்போதும் அது வளர்ந்து வரும் உயிர்ப்புள்ள ஆவணமாக இருக்க வேண்டும் என்று கருதினார் என்றும் பி.ஆர்.கவாய் கூறினார். நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய நான்கு தூண்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நிற்கிறது. "ஒரு சாதாரணப் பின்னணியிலிருந்து, அமராவதியில் உள்ள நகராட்சிப் பள்ளியில் படித்து, நீதித்துறையின் உச்சப் பதவியை நான் அடைந்ததற்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே காரணம்." என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.