NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாஜக வெற்றி பெற்றதற்கு தனது விரலை துண்டித்து நேர்த்திக்கடன் செலுத்திய நபர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாஜக வெற்றி பெற்றதற்கு தனது விரலை துண்டித்து நேர்த்திக்கடன் செலுத்திய நபர் 

    பாஜக வெற்றி பெற்றதற்கு தனது விரலை துண்டித்து நேர்த்திக்கடன் செலுத்திய நபர் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 08, 2024
    06:39 pm

    செய்தி முன்னோட்டம்

    மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநிலம், பல்ராம்பூரைச் சேர்ந்த 30 வயது நபர் தனது விரலைத் தானே துண்டித்து கோவிலில் காணிக்கையாக செலுத்தி இருக்கிறார்.

    பாரதிய ஜனதா கட்சியின்(பாஜக) தீவிர ஆதரவாளரான துர்கேஷ் பாண்டே, தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, காங்கிரஸ் முன்னணியில் இருப்பதாக ஆரம்பகாலப் போக்குகள் தெரிவித்ததை அடுத்து, ​​ஆரம்பத்தில் மனமுடைந்து போனார்.

    ஆனால், அதன் பிறகு பாஜக கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான 272 இடங்களைத் தாண்டியதை அறிந்ததும், அவர் தனது விரலை துண்டித்து உள்ளூர் காளி கோயிலில் காணிக்கையாக கொடுத்தார்.

    இந்தியா 

    மருத்துவர்கள் துண்டிக்கப்பட்ட விரலை மீண்டும் இணைக்க முடியவில்லை

    பின்னர் பாண்டே தனது காயத்தில் ஒரு துணியை கட்டி இரத்தப்போக்கை நிறுத்த முயன்றார்.

    ஆனால் போதிய சிகிச்சை அளிக்கப்படாததால், நேரம் ஆக ஆக அவரது உடல்நிலை மோசமடைந்தது.

    அதனையடுத்து, அவர் உடனடியாக சமாரியில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அவரது காயத்தின் தீவிரம் காரணமாக சுகாதார மையம் அவரை அம்பிகாபூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தது.

    அவர் மருத்துவக் கல்லூரிக்கு சென்றதும், மருத்துவர்களால் அவரது உடல்நிலையை சரி செய்ய முடிந்தது.

    ஆனால், சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டதால், அவர்களால் துண்டிக்கப்பட்ட விரலை மீண்டும் இணைக்க முடியவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஜக
    பொதுத் தேர்தல் 2024

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பாஜக

    முதல்வர் ஸ்டாலினை கஞ்சா பொட்டலத்துடன் சந்திக்க வந்த பாஜக நிர்வாகி; மதுரையில் பரபரப்பு முதல் அமைச்சர்
    அமித்ஷா போலி வீடியோ: காங்கிரஸ் தலைவருக்கு 3 நாள் காவல் காங்கிரஸ்
    டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்தார் டெல்லி
    11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று 3ம் கட்ட வாக்குப்பதிவு பொதுத் தேர்தல் 2024

    பொதுத் தேர்தல் 2024

    'சிலிண்டர் ரூ.500க்கும், பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.65க்கும் விற்கப்படும்': தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது திமுக திமுக
    தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது; வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்த தலைவர்கள் தமிழ்நாடு
    நாடாளுமன்ற தேர்தல் 2024: ஜனநாயக கடமையாற்றிய கோலிவுட் பிரபலங்கள் தேர்தல்
    மக்களவை தேர்தல் 2024: மாலை 3 மணி வரை 50% மக்கள் வாக்குபதிவு  தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025