LOADING...
மழையுடன் புத்தாண்டை வரவேற்ற சென்னை: விடியவிடிய நிற்காமல் பெய்த மழை
மழையுடன் புத்தாண்டை வரவேற்ற சென்னை

மழையுடன் புத்தாண்டை வரவேற்ற சென்னை: விடியவிடிய நிற்காமல் பெய்த மழை

எழுதியவர் Venkatalakshmi V
Jan 01, 2026
07:44 am

செய்தி முன்னோட்டம்

சென்னையில் மக்கள் 2026 ஆண்டை மழையுடன் வரவேற்றனர். முன்னதாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக நகரம் எங்கும் அலங்காரங்களும், வான வேடிக்கைகளும் ஏற்பாடு செய்திருந்த நிலையில் நேற்று நள்ளிரவிற்கு முன்னதாக மித மழை துவங்கியது. எனினும் சென்னைவாசிகள் மழையில் புத்தாண்டை வரவேற்க தவறவில்லை. சுயாதீன வானிலை ஆய்வாளரான 'தமிழ்நாடு வெதேர்மன்' பிரதீப் ஜான், "பெரம்பூர் சதத்துடன் வட சென்னை மீண்டும் ஒருமுறை ஸ்கோர் செய்தது. தென் சென்னையில் மழை பெய்யவில்லை" என்றார். மேலும்," சென்னையில் பெய்த மிக அதிகமான புத்தாண்டு மழை இதுவாகும், ஆனால் இது(மழை) சில பகுதிகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது" என்றார். பொதுமக்கள் மழையும் பொருட்படுத்தாமல் கோவில்கள் உட்பட பல வழிபாடு ஸ்தலங்களில் ஒன்று கூடியிருந்ததையும் காண முடிந்தது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement