LOADING...
சென்னையில் மாறிய வானிலை; அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது

சென்னையில் மாறிய வானிலை; அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 15, 2025
08:44 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் வெயில் சற்று தணிந்த நிலையில், சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று காலை 10 மணிக்குள், அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், வேலூர், திண்டுக்கல், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post