சென்னை, திருச்சி சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை - வருமானவரி நுண்ணறிவு பிரிவு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் ரூ.30 லட்சத்திற்கு மேல் பணப்பரிவர்த்தனை நடந்த பத்திரங்களின் பதிவுகள் முறையாக கணக்கில் காட்டப்படவில்லை என்னும் குற்றச்சாட்டு எழுந்தது.
அதனடிப்படையில், சென்னை செங்குன்றம் மற்றும் திருச்சி உறையூரிலுள்ள சார் பாதிவாளர் அலுவலகங்களில், நேற்று(ஜூலை.,4)தங்கள் சோதனையினை வருமானவரித்துறை அதிகாரிகள் துவங்கியுள்ளனர்.
அதன்படி, நேற்று நள்ளிரவுவரை தொடர்ந்து இச்சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இதன் முடிவில், பத்திரப்பதிவுகளில் முறைகேடு செய்தோர் குறித்த முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
கடந்த 5 ஆண்டுகளில் நடந்த நிதிப்பரிவர்த்தனையினை அடிப்படையாக கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டநிலையில், சென்னை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2,000கோடிக்கு மேல் கணக்கு காட்டப்படாதது தெரியவந்துள்ளது.
அதேபோல் திருச்சி உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கு காட்டப்படாமல் உள்ளதும் தெரியவந்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
கணக்கில் காட்டப்படாத கோடி கணக்கான பத்திரப்பதிவுகள்
#BREAKING | ரூ.3,000 கோடிக்கு கணக்கு காட்டாதது கண்டுபிடிப்பு#SubRegistrarOffice | #IT | #TamilNadu pic.twitter.com/SzpxbYIGdE
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) July 5, 2023