சென்னை வானிலை மையத்தின் புதிய இயக்குநராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு
எழுதியவர்
Sekar Chinnappan
Mar 19, 2026
05:39 pm
செய்தி முன்னோட்டம்
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குநராக மூத்த விஞ்ஞானி சிவானந்த தாமோதர பை இன்று (மார்ச் 19) முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு இந்திய வானிலை ஆய்வுத் துறையில் ஒரு இளம் விஞ்ஞானியாகத் தனது பணியைத் தொடங்கினார். சுமார் 34 ஆண்டுகள் வானிலை அறிவியலின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளின் வானிலையைக் கண்காணிக்கும் முக்கியப் பொறுப்பை வகிக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#NewsUpdate | சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்#SunNews | #Chennai | #Weather | #ChennaiRMC pic.twitter.com/Qj5Nc41aZN
— Sun News (@sunnewstamil) March 19, 2026