
சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்!
செய்தி முன்னோட்டம்
கொரோனா பரவலின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த தமிழகம்- இலங்கை யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடங்குகின்றன.
இலங்கையின் வடக்கு பகுதி தமிழர்கள் அதிகம் இருக்கும் தமிழர்களின் தாய்நிலப் பகுதியாகும்.
இந்த வடபகுதியில் இருக்கும் யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமானம் இல்லாமல் கொழும்புவிற்கு சென்று தான் யாழ்ப்பாணத்திற்கு செல்ல வேண்டிய நிலைமை இருந்தது.
இந்த வழியாக சென்று கொண்டிருந்த விமான சேவைகள் கொரோனாவால் கடந்த 3 ஆண்டுகள் நிறுத்தப்பட்டிருந்தன.
12 Dec 2022
வாரத்தில் 4 நாட்களுக்கு விமான சேவை!
இதனால், சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவையை மீண்டும் தொடங்க சொல்லி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து இந்த சேவைகள் இன்று மீண்டும் தொடங்கப்பட்டன.
அலையன்ஸ் ஏர் விமானம் என்னும் நிறுவனம் இன்று காலை, 9:25 மணிக்கு சென்னையில் இருந்து முதல் நேரடி விமான சேவையைத் துவங்கியது.
அதே போல், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை 11.50 மணிக்கு விமான சேவைகள் தொடங்கப்பட்டன.
இந்த சேவை வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு(திங்கள், செவ்வாய், வியாழன், சனி) வழங்கப்பட உள்ளன.