NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியில் முதல்வர் - மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை வெளியிட்டார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியில் முதல்வர் - மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை வெளியிட்டார்
    66 அரங்குகள் கொண்டு பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி

    சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியில் முதல்வர் - மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை வெளியிட்டார்

    எழுதியவர் Nivetha P
    Jan 19, 2023
    05:37 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் முதன்முறையாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 16ம் தேதி சர்வதேச புத்தக கண்காட்சி துவங்கப்பட்டது.

    இதில் 30க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பதிப்பாளர்கள் பங்கேற்றனர், கண்காட்சிக்காக 66 அரங்குகள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருந்தன.

    நேற்று நிறைவு பெற்ற இந்த புத்தக கண்காட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

    அப்போது மருத்துவ மாணவர்களுக்காக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பன்னாட்டு பதிப்பு நூல்களை அவர் வெளியிட்டார்.

    இதனை தொடர்ந்து பேசிய அவர், தொழில் வளர்ச்சி மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மூலம் உலகளவில் தமிழ்நாடு முத்திரை பதித்துள்ளது என்று பெருமிதம் கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, மா.சுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ரூ.3 கோடி

    365 நூல்கள் மொழிபெயர்ப்பு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

    தொடர்ந்து பேசிய அவர், இலக்கிய செழுமைமிக்க நமது படைப்புகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும்.

    உலகளவில் உள்ள சிறந்த அறிஞர்கள் படைப்புகளை தமிழில் கொண்டு வரும் பணியில் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

    மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த திட்டத்திற்காக ரூ.3 கோடி வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

    முன்னதாக, தமிழ் மொழியில் இருந்து மற்ற இந்திய மொழிகளுக்கும், 90 நூல்கள் உலக மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது குறிப்பிடவேண்டியவை.

    இந்நிலையில், மீண்டும் 365 நூல்களை மொழிபெயர்ப்பு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கண்காட்சியில் கையெழுத்தானது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    ஸ்டாலின்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    சென்னை

    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? தமிழ்நாடு
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் தமிழ்நாடு
    ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?! வானிலை அறிக்கை
    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி தமிழ்நாடு

    ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் மு.க ஸ்டாலின்
    இமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து! இந்தியா
    பொங்கல் பரிசு வழக்கு: தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதலா? தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவையில் மாற்றம்: புதிய இடங்கள் யார் யாருக்கு? தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025