Loading...
சென்னையில் அனைத்து போன்களிலும் திடீரென ஒலித்த சைரன் சத்தம்! பேரிடர் மேலாண்மைத் துறை அவசர எச்சரிக்கை
சென்னையில் அனைத்து போன்களிலும் திடீரென ஒலித்த சைரன் சத்தம்

சென்னையில் அனைத்து போன்களிலும் திடீரென ஒலித்த சைரன் சத்தம்! பேரிடர் மேலாண்மைத் துறை அவசர எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 18, 2026
03:28 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (அக்டோபர் 18) அதி கனமழை பெய்யக்கூடும் எனத் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது. பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சென்னை மாநகரத்தில் உள்ள அனைத்து செல்போன்களுக்கும் ஒரே நேரத்தில் சைரன் சத்தத்துடன் கூடிய அவசர எச்சரிக்கைச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சைரன் சத்தம்

செல்போன்களில் ஒலித்த அவசர சைரன் சத்தம்

பேரிடர் காலங்களில் பொதுமக்களைத் தயார்படுத்தும் அமைப்பின் மூலம் அனைத்து செல்போன்களுக்கும் ஒரே நேரத்தில் இந்த எச்சரிக்கை ஒலி அனுப்பப்பட்டது.

"சென்னையில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும்" என்ற செய்தி திரையில் தோன்றியது.

இதன் காரணமாக மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள விழிப்புணர்வு அடைந்துள்ளனர். அரசுத் துறைகள் அனைத்தும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

ட்விட்டர் அஞ்சல்

Embed

ADVERTISEMENT