LOADING...
ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற உணவு விநியோக முகவர்களுக்கு ஏசி ஓய்வறை அறிமுகம்!
உணவு விநியோக முகவர்களுக்கு ஏசி ஓய்வறை அறிமுகம்!

ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற உணவு விநியோக முகவர்களுக்கு ஏசி ஓய்வறை அறிமுகம்!

எழுதியவர் Venkatalakshmi V
Jun 12, 2025
08:47 am

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததை ஒட்டி, சென்னை மாநகராட்சி, உணவு விநியோக முகவர்களுக்கு ஓய்வெடுக்க வசதியாக, குளிர்சாதன வசதி, கழிப்பறை வசதிகள் அடங்கிய ஓய்வறைகளை முதன்முறையாக நகரத்தில் நிறுவியுள்ளது. 'இணைய தொழிலாளர் கூடம்' என்ற பெயரில் இந்த புதிய முயற்சி, வேலை நேர இடைவெளிகளில் முகவர்கள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெயில், மழை காலங்களில் அவர்களின் தேவையைக்கருதி இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. அண்ணா நகர் மற்றும் கே.கே. நகர் பகுதிகளில் முதல்கட்டமாக நேற்று, புதன்கிழமை (ஜூன் 11) இந்த ஏசி கழிப்பறைகள், சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகின்றன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள் 

ஓய்வுக்கூடங்களில் அடிப்படை வசதிகள் ஏற்பாடு 

இந்த ஓய்வறைகளில், டெலிவரி ஏஜெண்டுகள் பயன்பாட்டிற்கு கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி, ஆறு மொபைல் சார்ஜிங் பாயிண்டுகள், 25 பேர் அமரக்கூடிய இருக்கை வசதிகள், 20 இருசக்கர வாகனங்கள் நிறுத்திவைக்க நிழற்கட்டிட நிறுத்துமிடம் ஆகிய வசதிகள் உள்ளன. மாநகராட்சி வழிகாட்டுதல்களின்படி, உணவு விநியோக ஊழியர்கள் பொருத்தமான சீருடையில் இருந்தால் மற்றும் உண்மையான அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே கழிப்பறைகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதைக் கண்காணிக்க, செக்யூரிட்டி 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த முயற்சி எதிர்வரும் வாரங்களில் நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், உணவு விநியோக முகவர்கள் பயன்படுத்துவதற்கென நகரம் முழுவதும் கூடுதல் ஏசி கழிப்பறைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.