LOADING...
சென்னையில் சிஎன்ஜி தட்டுப்பாடா? நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்
சிஎன்ஜி ஆட்டோ ஓட்டுனர்கள்

சென்னையில் சிஎன்ஜி தட்டுப்பாடா? நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 11, 2026
09:08 am

செய்தி முன்னோட்டம்

சென்னையின் முக்கிய பகுதிகளில் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பான சன் நியூஸ் அறிக்கையின்படி, அடையாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மொத்தம் 3 சிஎன்ஜி பங்குகள் உள்ள நிலையில், தற்போது ஒரே ஒரு பங்கில் மட்டுமே எரிவாயு விற்பனை செய்யப்படுகிறது. எரிவாயு கிடைப்பதில் சிக்கல் உள்ளதால், அதிகாலையிலேயே ஆட்டோக்கள் கிலோமீட்டர் கணக்கில் வரிசையில் காத்திருக்கின்றன. மணிக்கணக்கில் வரிசையில் நிற்பதால், ஓட்டுநர்களின் வாழ்வாதாரமும் அன்றாட வருமானமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நாடு முழுவதும் எரிவாயு விநியோகத்தை உறுதி செய்வதற்காக மத்திய அரசு கண்காணிப்பு குழுவை அமைத்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement