Page Loader
பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்!
பழுதடைந்த சாலையால் இளம் பொறியாளர் உயிரிழப்பு

பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்!

எழுதியவர் Sindhuja SM
Jan 04, 2023
06:33 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை மதுரவாயல் அருகே பழுதடைந்த சாலையால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை போரூரை சேர்ந்தவர் சோபனா(22). இவர் கூடவாஞ்சேரியில் உள்ள Zoho நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை செய்து வந்தார். 12ஆம் வகுப்பு படிக்கும் தன் தம்பியை பள்ளியில் விடுவதற்காக தாம்பரம் பைபாஸ் சாலையில் மதுரவாயல் அருகே நேற்று(ஜன:3) இவர் சென்று கொண்டிருந்த போது பழுதடைந்த சாலையின் காரணமாக தடுமாறி கிழே விழுந்தார். அப்போது, அவர்களுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த மணல் லாரி ஒன்று சோபனாவின் மீது ஏறி இறங்கியது. இதனால், சோபனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தம்பி காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவத்திற்கு பிறகு, அங்குள்ள சாலைகளை பழுது பார்க்க அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

நிறுவனர்

Zoho நிறுவனர் இரங்கல்:

பழுதடைந்த இந்த சாலையைப் சரி செய்யக்கோரி, ஏற்கனவே அந்த பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். இந்த விபத்தை வழக்கு பதிவு செய்து விசாரித்த பூந்தமல்லி போக்குவரத்து காவல்துறையினர், இந்த விபத்தில் தொடர்புடைய வேன் ஓட்டுநர் பார்த்திபன் மற்றும் லாரி ஓட்டுநர் மோகன் ஆகியோரை கைது செய்துள்ளனர். இதற்கு இரங்கல் தெரிவித்த Zoho நிறுவனத்தின் CEO ஸ்ரீதர் வேம்பு, "குண்டும் குழியுமாக இருக்கும் நம் சாலைகளால் சோபனாவை அவரது குடும்பமும் Zoho நிறுவனமும் இழந்துவிட்டது." என்று தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.