
புத்தக கண்காட்சி: சிறைவாசிகளுக்கு தானம் கொடுக்கலாம்
செய்தி முன்னோட்டம்
சிறைகளில் வசிக்கும் கைதிகள் புத்தகங்களை அதிகம் வாசித்தால் அவர்களுக்கு மனமாற்றம் விரைவில் ஏற்படும் என்று சிறைத்துறையின் டிஜிபி அம்ரேஸ் புஜாரி கருதுகிறார்.
இதனால், கைதிகளுக்கு மன அழுத்தமும் குறைந்து சீர்திருத்தமும் ஏற்படும் என்று அவர் நம்புகிறார்.
இதனையடுத்து, கைதிகளுக்காக சீர்திருத்த புத்தகங்களை சேகரிக்க சிறைத்துறை முடிவு செய்துள்ளது.
இதன் முதல் கட்டமாக பொது மக்களின் பங்களிப்போடு சென்னை புத்தக திருவிழாவின் மூலம் 1 லட்சம் புத்தகங்கள் சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு, தமிழக அரசின் நூலகத்துறையும் அனுமதி வழங்கியுள்ளது.
அதனால், சென்னை புத்தக கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் தனி முகாமில் கலந்துகொண்டு சீர்திருத்த புத்தகங்களை கைதிகளுக்கு தானமாக வழங்கலாம்.
ட்விட்டர் அஞ்சல்
புத்தகங்களை சிறைவாசிகளுக்கு தானம் செய்யுங்கள்
சென்னை புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள ‘புத்தக தான அரங்கு’#SunNews | #ChennaiBookFair pic.twitter.com/3im0ZTGULU
— Sun News (@sunnewstamil) January 7, 2023