
சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிக்கை
செய்தி முன்னோட்டம்
சென்னையிலுள்ள அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைந்துள்ள நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் பகுதி பயணிகளின் வசதிக்கேற்ப பார்க்கிங் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்படவுள்ளது.
இதனால் சீரமைப்பு பணிகளுக்காக அந்த பகுதி வரும் மார்ச் 24ம் தேதி முதல் அடுத்த 3 மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகிறது என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஆலந்தூர் மெட்ரோ ரயில் பயனர்களுக்காக மாற்றாக அவர்கள் தங்கள் நான்கு சக்கர வாகனங்களை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தத்தில் தற்காலிகமாக நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகன நிறுத்தம் தற்காலிகமாக மூடல்
#JustIn | ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதி, சீரமைப்பு பணிகளுக்காக மார்ச் 24 முதல் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாகச் செயல்படாது - மெட்ரோ நிர்வாகம்#SunNews | #MetroRail | #Chennai pic.twitter.com/CVFhvQDL20
— Sun News (@sunnewstamil) March 10, 2023