சென்னை விமான நிலைய ஊழியரை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் மறைத்து வைத்த பெண் கைது
விழுப்புரம் மாவட்டத்தினை சேர்ந்தவர் ஜெயந்தன், 29வயதுடைய இவர் சென்னை நங்கநல்லூரில் தனது சகோதரியான கிருபா-வழக்கறிஞர், வீட்டிலேயே தங்கி கடந்த 5 ஆண்டுகளாக சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு விமான நிறுவனமான தாய் ஏர்வேஸ்'ஸில் ஊழியராக இருந்துள்ளார். இவர் கடந்த மார்ச் 18ம் தேதி பணிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பி சென்றுள்ளார். செல்லும்போது அப்படியே தனது சொந்த ஊரான விழுப்புரம் செல்வதாக கூறியுள்ளார். ஆனால் அவர் சொந்த ஊருக்கும் செல்லவில்லை, தனது சகோதரி வீட்டிற்கும் செல்லவில்லை. மாயமான அவரை கிருபா போன்மூலம் தொடர்புக்கொள்ள முயற்சித்ததில் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து பழவந்தாங்கல் காவல்நிலையத்தில் தனது தம்பியை காணவில்லை என்று கிருபா புகாரளித்தார். அதன்பேரில், ஜெயந்தன் மாயமானதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை ஆரம்பித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு விரைந்த தனிப்படை போலீசார்
போலீசார் ஜெயந்தனின் போன் சிக்னல் கடைசியாக தூத்துக்குடி மாவட்டம் செம்மாளம்பட்டி கிராமத்தை காட்டியுள்ளது. இதனையடுத்து கடந்த 1ம்தேதி தனிப்படைபோலீசார் புதுக்கோட்டை சென்று அப்பகுதியில் இருந்த பாக்கியலட்சுமி(38)என்பவரிடம் விசாரணை நடத்தியுள்ளார்கள். பாலியல்தொழில் செய்யும் இவர் முதலில் மறுத்தார்,பின்னர் ஒப்புக்கொண்டார். இவரை ஜெயந்தன் 2020ம்ஆண்டு மயிலைக்கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். அடுத்த ஆண்டே கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். திடீரென அவர் மீண்டும் அப்பெண்ணிடம் சென்று தன்னை பிரிந்தது ஏன் எனக்கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது பாக்யலட்சுமி தாக்கியதில் சம்பவயிடத்திலேயே இறந்துள்ளார் ஜெயந்தன். பின்னர் தன்னுடைய நண்பர் சங்கர் என்பவரது உதவியோடு ஜெயந்தனின் உடல் பாகங்களை துண்டுதுண்டாக வெட்டி பிளாஸ்டிக் பையில் அடைத்தும், மீதி உடல்பாகங்களை சூட்கேஸில் வைத்தும் சென்னை கொண்டுவந்து கோவளம் கடற்கரைப்பகுதியில் புதைத்துள்ளார்.