Page Loader
சென்னை ஆவடியில் உடற்பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு
சென்னை ஆவடியில் உடற்பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு

சென்னை ஆவடியில் உடற்பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு

எழுதியவர் Nivetha P
Mar 29, 2023
01:56 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை ஆவடியை சேர்ந்தவர் ஆகாஷ்(25), உடற்பயிற்சியாளரான இவர் ஜிம் ஒன்றினை நடத்தி வருகிறார். இவர் மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்று வெற்றிப்பெற கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். தொடர்ந்து இவர் அதிகளவில் ஸ்டெராய்டு ஊசிகளை செலுத்தி கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென இவர் ரத்த வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதிகளவில் ஸ்டெராய்டு ஊசி மருந்துகளை எடுத்துக்கொண்டதால் அவரது 2 கிட்னியும் செயலிழந்துள்ளது. இதன் காரணத்தினால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

சென்னை ஆவடியில் உடற்பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு