Page Loader
கர்நாடக சட்டசபையில் அமளி துமளி: 10 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் 
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாஜக எம்எல்ஏக்களும் முடிவு செய்துள்ளனர்.

கர்நாடக சட்டசபையில் அமளி துமளி: 10 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் 

எழுதியவர் Sindhuja SM
Jul 19, 2023
05:28 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடக சட்டப்பேரவையில் மசோதாக்களின் நகல்களை கிழித்து, துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானி மீது வீசிய 10 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக பெங்களூரில் வைத்து மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தேசிய அளவிலான எதிர்க்கட்சி தலைவர்களை வரவேற்க ஐஏஎஸ் அதிகாரிகளை காங்கிரஸ் அரசு நியமித்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கர்நாடக சட்டப்பேரவையில் போராட்டம் நடத்தினர். இந்த கடும் அமளிக்கு மத்தியில், சட்டப்பேரவையில் 5 மசோதாக்களை கர்நாடக-காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டவுடன், மதிய உணவுக்கு சபையை ஒத்திவைக்காமல் பட்ஜெட் குறித்து விவாதிக்க சபாநாயகர் யு.டி.காதர் முடிவு செய்தார்

பிலாய்

சபாநாயகரிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டதால் எடுக்கப்பட்ட முடிவு 

மேலும், துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானியிடம் சபையை வழிநடத்தும்படி அவர் கேட்டுக்கொண்டார். இதனால், ஆத்திரமடைந்த பாஜக எம்எல்ஏக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். சில பாஜக எம்எல்ஏக்கள் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களின் நகல்களை கிழித்து சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்திருந்த லமானி மீது வீசி எறிந்தனர். இதனையடுத்து, தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் தம்மை பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் குறிவைப்பதாக துணை சபாநாயகர் குற்றம்சாட்டினார். இந்நிலையில், சபாநாயகரிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டதால் 10 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கிடையில், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாஜக எம்எல்ஏக்களும் முடிவு செய்துள்ளனர்.